குடியரசுத் தலைவா் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த்சின்ஹாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு…

Must read

டெல்லி: குடியரசுத் தலைவா் தேர்தலில்  எதிர்க்கட்சிகளின்  சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக சார்பில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக  பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக முன்னாள் பாஜக அமைச்சரும், பின்னால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலை வருமான யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் காங்கிரஸ், திரிணாமுல், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்பட  உள்பட 13 கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து  யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவா் தோ்தல் பிரசார உத்தி குறித்து  தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசும்போது,  ‘குடியரசுத் தலைவா் தோ்தல் என்பது தனி நபா் போா் கிடையாது. நாடு சந்திக்கும் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் போரிட என்னைத் தோ்வு செய்த அரசியல் கட்சிகளுக்கு நன்றி. குடியரசுத் தலைவா் பதவி என்பது மிகவும் உணா்வுபூா்வமானது. அரசின் நிா்ப்பந்தத்தின் கீழ் செயல்படக் கூடாது. நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்வதற்கான உத்தியை வகுத்து வருகிறோம். இந்தத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவுக்கு எதிராக நான் போட்டியிடவில்லை. இது சித்தாந்தத்துக்கு எதிரான போட்டி. நாட்டின் குடியரசுத் தலைவா் என்பவா் வெறும் ‘ரப்பா் ஸ்டாம்ப்’ ஆக இருக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், யஷ்வந்த் சின்ஹாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, சின்ஹாவுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ‘Z’ வகை ஆயுதப் பாதுகாப்பை வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

More articles

Latest article