டெல்லி: நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு பாஜகா சார்பில் மீண்டும் ஓம்பிர்லாவும், காங்கிரஸ் கட்சி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவி நியமனத்தில் பாஜக மற்றும் எதிர்க்கட்சியினரிடையே ஒருமித்த கருத்து நிலவாத நிலையில், பாஜக சார்பில், ஓம்பிர்லா 2வது முறையாக நியமிக்கப்பட்டு உள்ளது. அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதே வேளையில் எதிர்க்கட்சிகள் சார்பில், காங்கிரஸ் மூத்த உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
18வது மக்களவை கடந்த 24ந்தேதி (நேற்று) தொடங்கியது. அதைதொடர்ந்து தற்காலிக சபாநயாகராக பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்ம பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்த தற்காலிக சபாநயாகர் மக்களவை எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வருகிறார். நேற்று தொடங்கிய பதவி பிரமாணம் நிகழ்வு இன்றுடன் முடிவடைகிறது.
இதற்கிடையில், மக்களவை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலுக்கான வேட்புமனுக்களும் தாக்கல் செங்யயப்பட்டு வருகிறது. மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். அதன்படி மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா பாஜக சார்பில் களமிறக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில், மூத்த உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து துணை சபநாயகர் பதவிக்கும் கடுமையான போட்டி எழுந்துள்ளது.
துணை சபாநாயகர் பதவியை, பாஜக தலைமை, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வழங்க முன்வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் உள்பட இண்டியா கூட்டணி கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “ஜனநாயகத்தில், தங்கள் வேட்பாளரை நிறுத்த அவர்களுக்கு (இந்திய கூட்டணி) உரிமை உள்ளது, ஆனால் எங்களுக்கு தெளிவான பெரும்பான்மை உள்ளது, எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. என்டிஏ வேட்பாளர் நல்ல ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
[youtube-feed feed=1]