சென்னை:  ஜனவரி  23ந்தேதி பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம்  சென்னை அருகே நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தொகுதிப்பங்கீடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் வரம்  23-ல் தொகுதிப்பங்கீடு குறித்த அறிவிப்பு  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக – பாஜக கூட்டணி, தற்போது மீண்டும்  சட்டமன்ற  தேர்தலுக்காக இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக இணைந்துள்ள நிலையில், தேமுதிக திமுக கூட்டணியில் சேரும் நிலை உருவாகி உள்ளது. அதேவேளையில், ஓபிஎஸ், டிடிவி அணி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் க  உள்பட சில சிறிய கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணியில் ஜனவரி 23-ந் தேதி தொகுதிப்பங்கீடு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே  நடைபெற உள்ள தேர்தலில், ஆட்சி அதிகாரம் தொடர்பான குழப்பம் நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் அதிக தொகுதிகள் கேட்பதாலும், தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்றால் 3 அமைச்சரவை ஒதுக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.  இதனால் கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.

இதனிடையே கடந்த வாரம் , எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் இடையே நடைபெற்ற சந்திப்பில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஜனவரி 23ந் தேதி என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

ஜனவரி 23ந்தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி,   மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த பொதுக்கூட்டமானது  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் உள்ள அத்தனை தமிழக தலைவர்களையும் மேடையேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 23ல் நடக்கும் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

வரும் 23ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வர உள்ள பிரதமர் நரேந்திர மோடி, மதுரைக்கு பதிலாக தற்போது சென்னையில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அரசியல் மற்றும் நிர்வாக காரணங்களால் இடம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பிரதமர் மோடி தமிழ்நாட்டு பயணம்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்திட்டத்தில் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்பு அறிவிக்கப்பட்டபடி, பிரதமர் மோடி ஜனவரி 23ஆம் தேதி மதுரைக்கு வருவார் என்றும், அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டிருந்தது.

மதுரை பாண்டிகோவில் அருகிலுள்ள அம்மா திடல் மைதானம், இந்த மாபெரும் கூட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதில் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட NDA கூட்டணிக் கட்சிகள் பங்கேற்க உள்ளதாகவும், தென் தமிழகம் முழுவதும் இந்த கூட்டம் பெரும் அரசியல் சூடு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறின.

இதற்கு முன்பே, பிரதமரின் வருகையை முன்னிட்டு NDA கூட்டணியின் அமைப்பு மற்றும் கட்சிகளின் இறுதி பட்டியலை முடிவு செய்யும் பேச்சுவார்த்தைகளும் வேகமடைந்ததாக செய்திகள் வெளியாகின. இதனால், மதுரை பொதுக்கூட்டம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மதுரையில் கூட்டம் நடத்த காவல்துறையிடம் அதிகாரப்பூர்வ அனுமதி கோரப்பட்டிருந்தது. காவல்துறையும் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளை ஆரம்பிக்கத் தயாராக இருந்தது. ஆனால் திடீரென, கூட்டத்தின் இடத்தை மாற்றும் முடிவை பாஜக உயர்நிலை நிர்வாகம் எடுத்துள்ளது.

மதுரைக்கு பதிலாக, பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த பாஜக தீர்மானித்துள்ளது. தலைநகர் சென்னை, மக்கள் திரள் அதிகம் கூடியிடும் பகுதி என்பதாலும், அரசியல் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதாலும் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரதமர் தலைநகரில் உரையாற்றுவது ஊடக கவனத்தை அதிக அளவில் ஈர்க்கும் என்பதால், கூட்டணிக்கே பெரிய பலனாக இருக்கும் என பாஜக நிர்வாகிகள் நம்புகிறார்கள்.

இதேவேளையில், மதுரை கூட்டத் திட்டம் மாற்றப்பட்டதால், அங்கு ஆரம்பிக்கப்பட்டிருந்த ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் நடைபெறும் புதிய கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]