டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும், மக்களவைத் தலைவராகவும், பாஜக தலைவ ராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த, எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று முற்பகல் டெல்லியில்  நடைபெற்றது. இதில், பாஜக மற்றும்  தேசிய ஜனநாயகக் கூட்டணி  கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய  பா.ஜ., எம்.பி., ராஜ்நாத் சிங், “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் வாழ்த்து தெரிவித்ததுடன்,  இன்று, தேசிய ஜனநயாக வட்டணி  தலைவரை தேர்வு செய்ய வந்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் தான் அதிகம் என நம்புகிறேன். இந்த எல்லா பதவிகளுக்கும் ஏற்றது, அவரை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய ஜே.பி.நட்டா உள்பட பலரும் மோடியை பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என கூறினர்.

இதையடுத்து,    தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டத்தகு வந்த மோடிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த இந்திய அரசியல் சாசனத்தை கையில் எடுத்து வணங்கிய பிரதமர் மோடி தனது இருக்கைக்கு சென்றார். அப்போது வந்தே மாதரம் என்ற கோஷம் எழுப்பப்பட்டது.

பின்னர்,  தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களின் கூட்டத்தில் மோடி,  ஒரு மனதாக மோடி மக்களவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அத்துடன், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் மற்றும் பாஜக தலைவராகவும் தெர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மலர் மாலைஅணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக 18வது மக்களவைக்கான தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் 7 கட்டங்களாக நடைபெற்று,  தேர்வு முடிவுகளும்  வெளியிடப்பட்டது.  அதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. அதைதொடர்ந்து, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யும் வகையில், இன்று டெல்லியில்,  தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த  ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். இதில் ஒருமனதாக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதைத் தொடர்ந்து, எம்.பிக்களின் ஆதரவு கடிதத்துடன் குடியரசு தலைவரை சந்தித்து மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரக்கூடும். அதன்படி, வரும் 9ம் தேதி மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் பதவியேற்பு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, முன்னாள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.