இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கான மொத்தம் 7 கட்ட தேர்தல்களில், இதுவரை நடந்து முடிந்துள்ள 3 கட்ட தேர்தல்களில் 303 தொகுதிகள் அடக்கம். இவற்றில், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய சரிவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில், இந்த 303 தொகுதிகளில், பாரதீய ஜனதாவுக்கு கிடைத்தவை 134. ஆனால், இந்தமுறையோ, அக்கட்சிக்கு அவற்றில் வெறும் 66 இடங்கள் மட்டுமே கிடைக்குமென கூறப்படுகிறது.
அதேசமயம், காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த 303 இடங்களிலிருந்து 137 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டணிக்கு கடந்தமுறை கிடைத்தவை வெறும் 49 இடங்களே.
பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி, மத்திய ஆட்சிக்கு எதிரான கடுமையான அதிருப்திகள், சட்டமன்ற தேர்தல்களின் கிடைத்த வாக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்தே, இந்தக் கணக்கீடு முன்வைக்கப்பட்டுள்ளது.