மும்பை: உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கு வரும் 31ந்தேதி சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக அக்கட்சியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவார் அடிவயிற்றில் எலி ஏற்பட்டு, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிசிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் உள்ளார்.
இந்த நிலையில், அக்கட்சியின் செய்திதொடர்பாளரும், மாநில அமைச்சருருமான நவாப் மாலிக் (Nawab Malik) சரத்பவாருக்கு வரும் 31ந்தேதி சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக டிவிட் பதிவிட்டுள்ளார். மேலும், பவாருக்கு பித்தப்பையில் கல் உள்ளது. அதை எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே சில நோய்களுக்கு மருந்துகள் எடுத்து வந்தார். தற்போது அவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அவருக்கு மார்ச் 31 ஆம் தேதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]