குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இயங்கி வந்த போதைப் பொருள் உற்பத்தி தொழிற்சாலையை போலீசார் இன்று கண்டுபிடித்தனர்.
உலகத்தரத்திற்கு நிகராக செயல்பட்டு வந்த இந்த உற்பத்தி ஆலையில் இருந்து ரூ. 300 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இரவோடு இரவாக நடத்தப்பட்ட நடவடிக்கையில் 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லீற்றர் அசிட்டோனுடன் பொடி மற்றும் திரவ வடிவில் 149 கிலோ மெபெட்ரோன் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக குஜராத் மாநிலத்தில் மூன்று இடங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் ராஜஸ்தான் மாநிலத்திலும் தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர்.
குஜராத் அகமதாபாத்: உலக தரத்திலான போதை மருந்து உற்பத்தி செய்யும் 3 ஆய்வகங்கள் ரகசியமாக செயல்பட்டு வந்ததை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்தனர்
அங்கிருந்து 149 கிலோ மெபெட்ரோன், 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் உள்ளிட்ட சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள… pic.twitter.com/4w7yQe8LDg
— Spark Media (@SparkMedia_TN) April 27, 2024
இந்த விவகாரத்தில், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 7 பேரை கைது செய்துள்ள போலீசார் முக்கிய குற்றவாளியை தேடிவருவதாகக் கூறியுள்ளனர்.