விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நானி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது அவருடைய நடிப்பில் உருவாகும் 28-வது படமாகும்.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது .

இந்தப் படத்தின் நாயகியாக நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு கணவருடன் ‘ட்ரான்ஸ்’ படத்தில் மட்டுமே நஸ்ரியா நடித்திருந்தார்.

நவம்பர் 21-ம் தேதி இந்தப் படத்தின் தலைப்பு வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.