இயக்குநர் விக்னேஷ் சிவனும் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே . அவர்களும் அவ்வப்போது ரொமான்டிக்கான புகைப்படங்கள் வீடியோக்கள் என பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர் .
இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
அதில், விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் கடற்கரையில் நின்றபடி பேசும் காட்சியை விளக்குகிறார் விக்னேஷ் சிவன். அதை ஆர்வத்துடனும், புன்னகையுடனும் கேட்டபடி நிற்கிறார் நயன்தாரா.
https://www.instagram.com/p/B_eteFehMoY/
இதுவரை வெளியிடாத இந்த வீடியோவை கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.