கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இன்றைய புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இப்போது நாம் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத கட்டத்தை கடந்து விட்டோம். அதேபோல் மறக்கமுடியாத 2021ஆம் ஆண்டை நோக்கி முன்னேறுவோம். சிறந்த தருணங்கள், வெற்றி, மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், அமைதி, திருப்தி மற்றும் அன்பு ஆகியவற்றுடன் இந்த அற்புதமான 2021ஐ நோக்கி செல்லும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன் .
Patrikai.com official YouTube Channel