
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகிபாபு.
தற்போது புது அவதாரம் எடுக்க உள்ளார். டகால்டி படத்தை தயாரித்த எஸ்.பி.சவுத்ரி அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்திற்காக யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுத உள்ளாராம்.
இத்திரைப்படத்தில் நாயகியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நயன்தாரா சம்மதிக்கவில்லையெனில் காஜல் அகர்வாலை அணுக திட்டமிட்டுள்ளார்களாம்.
ஏற்கனவே யோகிபாபு, கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடனும், கோமாளி படத்தில் காஜல் அகர்வாலுடனும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel