
அட்லி அடுத்து ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தை இயக்குகிறார். இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக வெளிவந்த செய்தியைத் தொடர்ந்து நயன்தாரா ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக இருந்தும் நயன்தாரா இதுவரை இந்தியில் நடித்ததில்லை.
இந்திப் படத்தில் நடிக்க நயன்தாரா எப்போதுமே ஆர்வம் காட்டியதில்லை. இந்தமுறை அட்லியின் ஆஃபரை அவர் ஒத்துக் கொள்வாரா என்பதும் தெரியவில்லை.
[youtube-feed feed=1]