விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நெற்றிக்கண். மிலிந்த் ராவ் இந்த படத்தை இயக்கிவருகிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும்
இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். திலீப் சுப்ராயன் ஸ்டண்ட் இயக்கம் செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார்.
தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.


ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்த விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார். நெற்றிக்கண் படத்தின் 60 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள காட்சிகளை விரைவில் படமாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.