விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படம் ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்.

தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படத்தின் முதல் பாடலான “இதுவும் கடந்து போகும்” பாடலின் முன்னோட்டமாக ஒரு புரோமோ வீடியோ பாடகர் சித் ஸ்ரீராம் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து இந்த பாடலுக்கு ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில் நெற்றிக்கண் திரைப்படத்தின் பாடல் வருகிற ஜூன் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல் பாடலை சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.