திமுகவில் இருந்த ராதாரவி தற்போது பாஜகவில் இருக்கிறார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்காக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நயன்தாரானு ஒரு நடிகை இருக்கு, நான் அதை பத்தி பேசவே இல்லை. ஆனால் பத்திரகையில போட்டு பெருசாக்கி மாட்டிவிட்டுட்டாங்க. நான் தான் பேசினேன், நான் தான் பேசினேனு சொன்னாங்க. சரி பேசினேனு வச்சுக்கோங்க போடானு சொல்லிட்டேன். உடனே திமுகவில் துடிக்கிறாங்க. பெண்களை பற்றி இழிவாக பேசினார் ராதாரவி அதனால் அவரை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்குகிறோம். நான் சொன்னேன் ஏன்டா தற்காலிகம் பெர்மனென்டாவே வெளியே வந்திடுறேன்டானு சொல்லி நான் தான் வந்தேன். சன் டிவியில் இந்த நியூஸ் வந்தது.
நான் தான் பேட்டி கொடுத்தேன். எதுக்கு நான் சொல்றேன்னா, நயன்தாரா யாருடா உன் கட்சி கொள்கை பரப்புச் செயலாளரா, சொல்லு. என்ன உறவு உனக்கு. சரி உதயநிதிக்கும், அதுக்கும் உறவுனா அதுக்கு நான் என்ன செய்றது என்றார்.
ராதாரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நயன்தாரா ரசிகர்கள் கூறி வருகிறார்கள். விளம்பரம் தேட நயன்தாராவை அசிங்கப்படுத்துவதே இந்த ராதாரவிக்கு வேலையாகிவிட்டது என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ராதாரவியை கண்டிக்க மாட்டீர்களா என்று ராதிகா சரத்குமாரிடம் நியாயம் கேட்டுள்ளனர்.