தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கின்றனர்.
‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் காதலில் விழுந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பல இடங்களுக்குச் சென்று, அங்கு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
அதோடு இருவரும் ஜோடியாக பல ஆன்மிக தலங்களுக்கும் சென்று வருகிறார்கள். இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். அதோடு, மும்பையிலுள்ள சித்தி விநாயகர், மஹாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர்.
அப்போது ரோட்டோர பேக் கடையில், குறைந்த விலைக்கு பேக்கை கொடுக்குமாறு நயன்தாரா பேரம் பேசுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
https://twitter.com/NayantharaFCK/status/1449972029180944409