தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கின்றனர்.
கோவாவில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ரொமான்டிக் பிறந்தநாளாக கொண்டாடினார் நயன்.
சமீபத்தில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் தனி விமானம் மூலம் கொச்சின் சென்றுள்ளனர். இருவரும் விமானத்தில் இருந்து இறங்கும் விமான நிலைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியானது. இருவரும் தங்களது சொந்த விஷயமாகவும் கொச்சினில் சில நாட்கள் கழிப்பதற்காகவும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது இருவருக்கும் எப்போது கல்யாணம் என்ற கேள்வி இணையத்தில் அதிகமாக வலம் வருகின்றன.