இஸ்லாமாபாத்:
பனாமா ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பொறுப்புடமை நீதிமன்றத்தில் 3 ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு வரும் நவாஸ் ஷெரிப் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிபின் மனைவி குல்சூம் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதுவரை மூன்று முறை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. லண்டனில் சிகிச்சை பெற்று வரும் மனைவியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என நேற்றைய விசாரணையின்போது நவாஸ் ஷெரிப் நீதிபதியிடம் கேட்டு கொண்டார்.
டிசம்பர் 5-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை ஒருவார காலம் விசாரணையின் போது நேரில் ஆஜராக விலக்களித்து நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து, நவாஸ் ஷெரிப் இன்று மீண்டும் லண்டன் புறப்பட்டு சென்றார்.