இஸ்லாமாபாத்:
பல்வேறு முறைகேடு சம்பந்தமான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை பாதிக் கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை உனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
‘
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் செரீப் மீது தொடரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், அவர்மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் கடந்தஆண்டு அவருக்கு 7 ஆண்டு கள் சிறைத்தண்டனை விதித்தது. கடந்த மாதம் 24-ந் தேதி தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து பிரதமர் பதவியும் பறிபோனது. பின்னர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நவாஸ்ஷெரீப்புக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
இநத் நிலையில், நவாஸ்ஷெரீப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாக அவரது டாக்டரும், இருதய நோய் நிபுணருமான அட்னன் கான் தெரிவித்துள்ளார். இருதய நோய் காரணமாக அவரது உடல்நிலை மோசமாகி வருவதாகவும், அவரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
அதுபோல சிறைத்துறை மருத்துவ குழுவினரும், நவாஸ் ஷெரீப்பை மருத்துவமனையில் அனுமதித்து, அவரது இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், மருத்துவர்களின் பரிந்துரையை பாகிஸ்தான் சிறைத்துறை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.