ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்துவரும் ஆக்ஷன் த்ரில்லர்
படம் ‘தர்பார்’. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.
ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்க இதில் சுனில் ஷெட்டி, ப்ரதீக் பப்பார், தலிப் தஹில், யோகி பாபு, ஆனந்த ராஜ், போஸ் வெங்கட், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார்.
இந்த படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி நடிக்கிறார் என முன்பே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் நவாப் ஷா நெகடிவ் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் வில்லன் சுனில் ஷெட்டியின் நண்பராக படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளது.