மும்பை: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் கையுறைகள் தேவை அதிகரித்துள்ள நிலையில், ஏற்கனவே மருத்துவமனைகளில் பயன்படுத்திய கையுறைகளை, சேகரித்து, அதை சுத்தப்படுத்தி, மீண்டும் விற்பனை செய்து வந்த கும்பல் சிக்கி உள்ளது.
கையுறைகள் பொதுவாக மருத்துவமனைகளில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைஅணிந்து மருத்துவர்கள் நோயாளிகளுக்குசிகிச்சை அளித்துவிட்டு, அதை தூர வீசிவிடுவது வழக்கம்.
ஆனால், தற்போது கொரோனா தொற்று பரவிலில் இருந்து பாதுகாக்க கையுறைகள் அணிவது சிறந்ததது என மருத்துவ உலகம் கூறியிருப்பதால், கையுறைகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக, மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில், பயன்படுத்தப்பட்ட கையுறைகளை சேகரித்து, அதை சுத்தம் செய்து விற்பனை செய்து வந்த ஒரு கும்பலை கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், பயன்படுத்தப்பட்ட கையுறைகளை சேகரித்து, அதை சலவை செய்து மீண்டும் புதிது போலவே மாற்றி விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து மூன்று டன் அளவுக்கு பயன்படுத்தப்பட்ட கையுறைகளை போலீசார் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.