புவனேஷ்வர்:

லோக்சபா தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், மாநிலத்தை ஆட்சி செய்து வந்த பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, 5வது முறையாக மாநில முதல்வராக நவீன் பட்நாயக் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

ஒடிசா மாநிலத்தில் 147 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இதில்  112 தொகுதிகளில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றது. பாஜக 23 தொகுதிகளும், பாஜக 9 தொகுதிகளையும் கைப்பற்றியது.

அதுபோல, மக்களவை தேர்தலிலும்,  பிஜு ஜனதா தளம் 12 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளி லும் காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.  இதையடுத்து மாநில முதல்வராக பிஜு மீண்டும் பட்நாயக் இன்று பதவி ஏற்றார்.

பிஜு பட்நாயக்  கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து ஒடிசா முதல்வராக தொடர்ந்து வருகிறார். தற்போது 5 முறையாக பதவியேற்றுள்ளார்.