சென்னை:
தமிழகத்தில் உள்ள டோல் பிளாசாவில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இது தொடர்பாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு திமுக எம்.பி. கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள டோல் பிளாசாவில் தமிழர்களே பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்தியஅரசு உறுதி அளித்துள்ளது.
திமுக எம்.பி. பி.வில்சன், மத்தியபோக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு டோல் பிளாசா தொடர்பாக அக்டோபர் 10 ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஒவ்வொரு டோல் பிளாசாக்களில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்த படுவதால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே, அந்த பகுதியில் உள்ள தமிழர்களை அங்கு பணியில் அமர்த்த வேண்டும், இதுகுறித்து டோல்பிளாசா நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, , “தேவையான நடவடிக்கைக்காக” எம்.பி.யின் பிரதிநிதித்துவத்தை செயலாளர் (ஆர்.டி.எச்) மற்றும் இணை செயலாளர் (எம்.வி.எல்) ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சரின் சாதகமான பதிலைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள டோல் பிளாசாக்களில், தமிழ் பேசுபவர்கள் விரைவில் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.