டெல்லி: தேசிய தேர்வு முகமை ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகளை  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.

2025ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் (JEE Main) முதல் கட்ட தேர்வு ஜனவரி 22 தொடங்கி ஜனவரி 29 தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வில் 12.5 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த  நிலையில்,  தேசிய தேர்வு முகமை (NTA), கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) முதன்மை அமர்வு 1 முடிவுகளை பிப்ரவரி 12 ஆம் தேதி jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட உள்ளது. இந்தத் தகவலை தேர்வுத் தகவல் அறிக்கையில் அந்த நிறுவனம் சேர்த்துள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் அட்டைகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெறலாம். இந்த தேர்வு முடிவுகளில்  14 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுனய் என்ற மாணவன் 99.99% மதிப்பெண்களுடன் 24 வது இடத்தை பிடித்துள்ளார். இதில் 13 பேர் மாணவர்களும், ஒரு மாணவியும் அடங்குவர்.

Jee Exam Resultsl 12-02-25