டெல்லி: கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான நெட் தோ்வு நவம்பர் 19ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசிய தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது.
கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கான தேசியத் தகுதித் தோ்வு எனப்படும் நெட் தேர்வானது ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பா் மாதம் இறுதியில் நடைபெறும். தற்போது, கொரோனா லாக் டவுன் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.
ஆகையால் நெட் தோ்வும் தள்ளி வைக்கப்பட்டு செப்டம்பர் 24ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா பரவல் ஓயாததால், தேர்வு நடக்கவில்லை. இந் நிலையில், தற்போது கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான நெட் தோ்வு நவம்பா் 19ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசியத் தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கருத்துருவை ஏற்று, தோ்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. தற்போது நவம்பா் 19ம் தேதி முதல் தோ்வுகள் நடைபெறும்.
கூடுதல் தகவல்களுக்கு ugcnet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது.