டெல்லி: மத்தியஅரசு, தேசிய விளையாட்டு விருதுகள் பெறுவோர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், செஸ் வீரர் பிரக்ஞானந்தா, வில்வித்தை வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகியோருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா, அர்ஜூனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டு விளையாட்டு விரர்கள் 25 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்தி யஇளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விருது பெறுவோர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது:
தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு வழங்கப்படுகிறது.
அர்ஜுனா விருதுகள்:
சீமா புனியா ( தடகளம்), எல்தோஸ் பால் (தடகளம்), அவினாஷ் முகுந்த் சேபிள் (தடகளம்), லக்ஷ்யா சென் (பேட்மிண்டன்), பிரணாய் (பேட்மிண்டன்), அமித் (குத்துச்சண்டை), நிகத் ஜரீன் (குத்துச்சண்டை), பக்தி பிரதீப் குல்கர்னி (செஸ்), ஆர் பிரக்ஞானந்தா (செஸ்), டீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி), சுஷிலா தேவி (ஜூடோ), சாக்ஷி குமாரி (கபடி), நயன் மோனி சைகியா, சாகர் கைலாஸ் ஓவல்கர் (மல்லகாம்ப்), இளவேனில் (வில்வித்தை), ஓம்பிரகாஷ் மிதர்வா, ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்), விகாஸ் தாக்கூர் (பளு தூக்குதல்), அன்ஷு (மல்யுத்தம்), சரிதா (மல்யுத்தம்), பர்வீன், மானசி கிரிஷ்சந்திரா ஜோஷி, தருண் தில்லான், ஸ்வப்னில் சஞ்சய் பாட்டீல், ஜெர்லின் அனிகா
துரோணாச்சார்யா விருது: ஜிவன்ஜோத் சிங் தேஜா (வில்வித்தை), முகமது அலி கமர் (குத்துச்சண்டை), சுமா சித்தார்த் ஷிரூர் (பாரா ஷூட்டிங்), சுஜீத் மான் (மல்யுத்தம்) ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது தரம்வீர் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு வழங்கப்பட உள்ளது.