ஊட்டி
நீலகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தேசிய மீட்புக் குழுவினர் ஊட்டிக்கு வந்துள்ளனர்

தென்மேற்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எனஎச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 32 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் ஊட்டிக்கு வந்துள்ளனர். பேரிடர் ஏற்படும் இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த குழுவினருக்காக 2 வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்புக் குழுவினர் கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெறும் வரை நீலகிரியில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]