சென்னை: ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்  என தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நவம்பர் 16 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினம் அனுசரிக்கப்படுகிறது.   ‘பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா’ தொடங்கப்பட்ட நாளான இன்று (நவ.16) நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பத்திரிகையாளர்கள் தினமான இன்று, உண்மையையும் பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். அதிகரித்து வரும் சகிப்பின்மைக்கு மத்தியில், பத்திரிகை யாளர்களின் தைரியம், ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம் என குறிப்பிட்டுள்ளார்.