டெல்லி: பயங்கரவாதம் – போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக தலைநகர் டெல்லியின் என்சிஆர் பகுதி உள்பட பஞ்சாப், ஹரியானா உள்பட வட மாநிலங்களில்  40-க்கு மேற்பட்ட இடங்களில்  இன்று அதிகாலை முதல் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பயங்கரவாதிகள், குண்டர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்/கடத்தல்காரர்களுக்கு இடையே உருவாகி வரும் தொடர்பைத் தகர்க்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி-என்சிஆர் பகுதியில் பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளை மையமாக  கொண்டு பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையே வளர்ந்து வரும் தொடர்பை உடைக்கும் விதமாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கும்பல் தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் உள்ளிட்ட 50 இடங்களில் என்ஐஏ சோதனைகளை நடத்தியது. அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகிறது.