புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரிய ராகுல் கோரிக்கையை அமலாக்க துறை ஏற்றுக் கொண்டது.

நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் 3 நாட்களாக விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய் சோனியா காந்தியை பார்க்க வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையை ஏற்று நேற்று அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. இந்நிலையில், இன்று 4-வது நாளாக விசாரணைக்கு ஆஜராக ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சோனியா காந்தி மருத்துவமனையில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராவதை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு ராகுல் காந்தி நேற்று கடிதம் எழுதினார். அந்த கோரிக்கையை ஏற்ற அமலாக்கத்துறை, ராகுல் காந்திக்கு 3 நாள் அவகாசம் அளித்துள்ளது.

[youtube-feed feed=1]