சென்னை:  ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு தேவையான பெட்டிகளை தயாரித்து வரும்,  சென்னை ஐசிஎப்-க்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் பிரசித்தி பெற்றது சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலை.  இதைத்தோடர்ந்து, இங்கு ரயில் எஞ்சின் மற்றும் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 2024 நிதி ஆண்டில் மட்டும், FY24 இல்  இந்திய ரயில்வேயில் பல நவீனமயமாக்க ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளதுடன், அதற்கு தேவையான நவீன ரயில் பெட்டிகளை தயாரித்து,  இந்திய ரயில்வே வரலாற்று மைல்கல்லை எட்டி உள்ளது.   அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற ஐகானிக் ரயில்களுக்கான மேம்படுத்தல்கள் உட்பட, 2800க்கும் மேற்பட்ட பெட்டிகள் தயாரித்து சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த கோச் பேக்டரி (ICF)  புதிய வரலாறு படைத்துள்ளது.

இதன் காரணாக,  சென்னை பெரம்பூர்  ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு (ICF)  தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் விழாவில், குடியரசுத் துணைத் தலைவா் ஜக்தீப் தன்கா், மத்திய மின்சாரம் மற்றும் வீட்டு வசதி அமைச்சா் ஸ்ரீபாத் யெசோ நாயக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், ஆற்றல் சேமிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கும், உற்பத்தியில் எவ்வித குறைபாடின்றி புதுப்பிக்கதக்க ஆற்றல் மூலம் இயங்கி வரும் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

அந்த வகையில் போக்குவரத்து பிரிவில் புதுமையை செயல்படுத்தி ‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்த ஐசிஎப் தொழிற்சாலை முதல் பரிசு பெற்றது. விருதை ஐசிஎப் முதன்மை தலைமை பொறியாளா் (எலக்ட்ரிக்கல்) சி.ஆா்.ஹரிஷ் பெற்றுக்கொண்டாா். 00:06 / 02:00 இந்நிலையில் விருது பெற்ற துறையினரை ஐசிஎப் பொதுமேலாளா் யு.சுப்பாராவ் பாராட்டினாா்.