சென்னை:
தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய 3 மாவட்டங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை நீடித்து வருகிறது.
இதுகுறித்து வெளியான செய்தியில், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா 1, மதுரைக்கு இரண்டு எனத் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள் விரைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel