டில்லி:
சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்துள்ளது.

நாட்டுப்பற்றை வளர்ப்பதற்காக தியேட்டர்களில் படம் போடுவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவைக் கொண்டு வந்தது. இந்த உத்தரவை மத்திய அரசு தற்போது நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் அமைச்சரவை குழு புதிய வழிமுறைகளை வகுக்கும் வரை தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமாக்க வேண்டியதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel