டில்லி,
ந்தியாவின் தேசிய கீதமான ‘ஜனகனமன’ நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் படம் தொடங்குவதற்கு முன்பு கண்டிப்பாக ஒலிக்கப்பட வேண்டும் என்றும், அப்போது பொதுமக்கள் மரியாதை செலுத்த வேண்டும் உச்ச நீதி மன்றம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீர்ப்பு கூறியது.
உச்ச நீதி மன்றத்தில் இந்த தீர்ப்பு பொதுமக்களிடையே விவாத பொருளாகி உள்ளது.  விவாதத்தின் உச்சக்கட்டமாக செக்ஸ் வைத்துக்கொள்ளும் முன்பும் தேசிய கீதம் பாட வேண்டுமா? என்ற வினாவை சமுக வலைதளங்களில் எழுப்பி உள்ளனர் சிலர்.
இந்நிலையில், பாரதியஜனதா கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி  அஸ்வினி உபாத்யாய், தேசிய கீதம் குறித்த மனு தாக்கல் செய்திருந்தார்.
hammer
அந்த மனுவில், தியேட்டர்களில் தேசிய கீதம் பாடச்சொல்வது போல, நாட்டில் உள்ள அனைத்து நீதி மன்றங்களிலும் விசாரணை தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்றும் அதற்கு அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்றும், அதுகுறித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஆனால், உச்ச நீதி மன்றமோ,  நீதிமன்றங்களில் கட்டாயம் தேசிய கீதம் பாட உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.
எங்களுக்கு வந்தா ரத்தம்…  உங்களுக்கு வந்த தக்காளி சட்னியா….?