டெல்லி: கெஜ்ரிவால் கைது சம்பந்தமாக, ஐ.நா.சபை கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு இந்திய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் பதிலடி கொடுத்தள்ளார்.  எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை, இந்தியாவில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள்  யாரும் இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து, அமெரிக்கா, ஐநா சபை உள்பட சில நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது சலசலப்பை ஏற்படுத்தியது. நமது நாட்டு விஷயத்தில் அண்டை நாடுகள் கருத்து தெரிவிப்பதற்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் கருத்து குறித்து, இந்திய வெளியுறவுத்துறை, அமெரிக்க தூதரிடம் கண்டனம் தெரிவித்து விளக்கம் கோரியுள்ளது.

இந்த நிலையில், ஐ.நா., தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,  இந்தியாவின் சட்டம் ஒழுங்கு குறித்து வெளியில் இருந்து யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர்மையான நீதி நடைமுறை உள்ள ஜனநாயகம், இந்தியாவில் உள்ளது. எந்த ஒரு தனி நபருக்காகவோ, ஒரு குழுவினருக்காகவோ, சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இங்கு சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறியுள்ளார்.

மதுபான கொள்கை ஊழலில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கெஜ்ரிவாலின் கைது குறித்து  சில க நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன. முதலில் குரலெழுப்பிய ஜெர்மனிக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, ‘எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்’ என கேட்டுக்கொண்டது. அடுத்ததாக அமெரிக்காவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க துாதரக அதிகாரியை நேரில் அழைத்து தங்கள் கண்டனத்தை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐ.நா., பொதுச் செயலர் ஆண்டனியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் , இந்தியாவிலோ அல்லது தேர்தல் நடக்கும் எந்த நாட்டிலோ, மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கெல்லாம் அனைவரும் சுதந்திரமாகவும், நியாயமாகவும் ஓட்டளிக்கும் சூழல் நிலவுவதாக நாங்கள் நம்புகிறோம் என்று கூறியிருந்தார்.

இதற்கு,  நம் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தன்கர், இந்தியா ஒரு ஜனநாயக நாடு, வலுவான நீதித்துறை அமைப்புடன் எந்த தனிநபராலும் அல்லது குழுவாலும் சமரசம் செய்ய முடியாது. “நமது வலுவான நீதித்துறை அமைப்பு, நமது ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் நாம் எதை அடைந்துவிட்டோம் என்பது தொடர்பாக தேசவிரோத கதைகளை நடுநிலையாக்குவதில் நாம் மிகவும் கவனமாகவும், உணர்திறனுடனும், செயலூக்கமாகவும் இருக்க வேண்டும்” என்று தன்கர் கூறினார்.

“நள்ளிரவில் கூடிய நீதித்துறை நிறுவனம்தான், விடுமுறை நாளில் கூடி (மற்றும்) நிவாரணம் அளித்துள்ளது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் தங்களை நடத்துவதால், எங்கள் நிறுவனங்களை குறிவைக்க முடியுமா, ”என்று  கேள்வி எழுப்பியவர்,  ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் நீதித்துறை ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க முடியும், அது அரசாங்கத்திற்குப் பிடிக்காது என்றும் அது பல சந்தர்ப்பங்களில் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் கருத்துக்கு, இந்தியா வலுவான நீதி அமைப்புடன் கூடிய ஜனநாயக நாடு என்று அவர் கூறியதுடன்,   ஐரோப்பாவில் உள்ள  “வளர்ந்த ஜனநாயகம் உள்ள நாடு இந்தியா, நம்மீது கருத்து கூறுவதற்கு முன்பு  அவர்கள் சிந்திக்க வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியா வலுவான நீதி அமைப்புகளைக் கொண்ட ஒரு ஜனநாயக நாடு என்று கூறினார்.

டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார் மற்றும் ஏப்ரல் 1 வரை காவலில் உள்ளார். குடியுரிமை (திருத்தம்) சட்டம் பற்றிய விவாதத்தைப் பற்றி குறிப்பிடுகையில், சமீபத்தில் உருவாக்கப்பட்ட விதிகள், தன்கர் சட்டம் பாரபட்சமானது அல்ல என்றார்.