ஜெய்ப்பூர்:

சென்னை கொளத்தூர் நகைக் கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய ராஜஸ்தான் மாநிலம் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொள்ளையர்கள் சுட்டதில் பெரிய பாண்டி இறந்ததாக கூறப்பட்டது. பின்னர் பெரியபாண்டியுடன் சென்ற மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகர் கொள்ளையர்களை நோக்கி சுட்டபோது குறிதவறி பெரியபாண்டி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக ராஜஸ்தான் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த தினேஷ் என்ற நபரை சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரும், பெரிய பாண்டியை சுட்டுக் கொன்றதாக கூறப்படும் நாதுராம் என்பவரை ராஜஸ்தான் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.