புனே: நடராஜன் தான் ஒரு சிறந்த பெளலர் என்பதை, கடைசி ஓவரில் நிரூபித்துவிட்டார் என்று பாராட்டியுள்ளார் இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன்.

எங்களுக்கு இந்தப் போட்டியில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றி எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இந்த ஆட்டத்தில் நான் விளையாடியது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. நீண்டகாலமாக இங்கிலாந்து அணிக்கு என்னால் பங்களிப்பு ஏதும் அளிக்க முடியவில்லை. இந்தப் போட்டியில் வென்று கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.

ஆனால், தோற்றுவிட்டோம். அதனால்தான் ஒவ்வொரு பந்தையும் நான் மிகவும் நிதானமாகக் கையாண்டேன். பந்தைச் சமாளித்து ஆடுவதற்குக் கடினமாக இருந்தது. நடராஜன் கடைசி ஓவரில் சிறப்பாகப் பந்து வீசினார். உண்மையில், தான் சிறந்த பந்துவீச்சாளர் என்பதைக் கடைசி ஓவரில் நிரூபித்துவிட்டார்.

புவனேஷ்வர் குமார் அற்புதமான பந்துவீச்சாளர். அவர் பந்துவீச்சில் ஏற்கெனவே ஆடியிருக்கிறேன். மைதானத்தைப் பொறுத்தவரை பேட்ஸ்மேன்க்ளுக்குச் சிறந்த ஆடுகளமாக இருந்தது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையிலும் பிரமிப்பாக இருக்கிறது. எனக்கு இந்த ஒருநாள் தொடர் அனுபவப் பாடமாக அமைந்தது. இந்தக் காலநிலையில் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வத்துடன் இருக்கிறேன்” என்றுள்ளார் சாம் கர்ர்ன்.