ஒரேயொரு சுற்றுப்பயணம் – தமிழ்நாட்டின் நடராஜன் செய்துள்ள புதிய சாதனை!

Must read

பிரிஸ்பேன்: ஒரேயொரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டு, அனைத்துவகை கிரிக்கெட்டிலும் முதல் சர்வதேச அறிமுகம் பெற்றுள்ள சாதனையை செய்துள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.

இந்த சிறப்புவகை சாதனையை செய்துள்ள முதல் இந்திய கிரிக்கெட் வீரர் இவர்தான்! இவரின் அனைத்துவகை சர்வதேச அறிமுகமும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

இவர், இந்திய அணிக்காக, மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அதில் இந்திய அணி வென்றது.

பின்னர், மூன்று டி-20 போட்டிகளிலும் பங்கேற்றார். அத்தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

தற்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார் நடராஜன். இதிலும் இந்திய அணி வெல்லுமா? என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஒரேயொரு சுற்றுப்பயணத்தில், மூன்றுவகை கிரிக்கெட்டிலும் முதல் சர்வதேச அறிமுகம் பெற்ற இந்தியர் என்ற வித்தியாச சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் நடராஜன்!

 

 

More articles

Latest article