
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் வரும் 7 ஆம் தேதி தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.
அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தன் மனைவி கமீலாவுடன் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தற்போது உள்ள சூழலையும், அதனால் பென்ஷன் பெற முடியாமல் இந்த கொரோனா காலத்தில் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்களின் நிலைமையையும் எடுத்துக் ஸ்டாலினிடம் கூறியதாக கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel