சூரியனின் மேல் படலத்தைத் தொட்டது அமெரிக்காவின் ‘Parker Solar Probe’ விண்கலம்! நாசா வரலாற்று சாதனை… புகைப்படங்கள்

Must read

நியூயார்க்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சூரியன் குறித்து ஆய்வு நடத்த அனுப்பிய  ‘Parker Solar Probe’ விண்கலம் சூரியனின் மேல்படலத்தை தொட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இது நாசாவுக்கு மேலும், பெருமையை சேர்த்துள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா (National Aeronautics and Space Administration – NASA)  இது 1958-ம் ஆண்டு ஜூலை 29-ந்தேதி தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது நிறுவப்பட்டது. இது   விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும். இந்த அமைப்பின் மூலம் ஏராளமான விண்கலங்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நிலவில் மனிதன் கால் பதித்தது முதல், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது உள்பட ஏராளமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, அறிவித்து உள்ளது. இதுவரை பல கோள்களுக்கு ஆய்வு நடத்தி விண்கலங்களை அனுப்பிய நாசா முதன்முறையாக சூரியன் குறித்து ஆய்வு செய்யவும் விண்கலத்தை அனுப்பியது.
இதுவரை எந்தவொரு நாடும் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்ப முன்வராத நிலையில், உலக வரலாற்றில் முதன்முறையாக நாசா, கடந்த 2018 ஆம் ஆண்டு ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ என்ற விண்கலத்தை சூரியன் குறித்து ஆய்வு செய்ய நடத்தியது. இந்த பார்க்கர் சோலார் புரோப் விண்கலம்  மணிக்கு 213,200 மைல் வேகத்தில் பயணித்தது. பூமியில் இருந்து, சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சூரியன், இங்குள்ள மக்களையே சுட்டெரிக்கும் நிலையில், அதை நெருங்க முடியுமா? என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், நாசா, அதை நெருங்க முடியும் என்ற நம்பிக்கையுடன் தனது ஆய்வை மேற்கொண்டது.
நாசாவின் இந்த ஆய்வு உலக விஞ்ஞானிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், நாசாவின் ‘Parker Solar Probe’ விண்கலம் சூரியனின் மேல்படலத்தை தொட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.
முன்னதாக, சூரியனை நோக்கி பயணித்த இந்த விண்கலமான  அவ்வப்போது சூரியனைப்பற்றிய பல தகவல்களை நமக்கு அனுப்பி வந்தது. விண்வெளியில் உள்ள  துகள்கள் மற்றும் காந்தப்புலங்களின் மாதிரிகளை சேகரித்து கொண்டு வருவதாக  கூறிய நாசா, அது அனுப்பிய புகைப்படங்களையும் வெளியிட்டது.
இந்த நிலையில்  மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து வீனஸ் ஃப்ளைபைகளுக்குப் பிறகு, ஏப்ரல் 28, 2021 அன்று சூரியனின் வளிமண்டலத்தில் Parker Solar Probe’ விண்கலம் நுழைந்தது. அதைத்தொடர்ந்து,   யாருமே நெருங்க முடியாது என்று நினைத்த சூரிய மண்டலத்தை நாசா விண்கலம் நெருங்கியதோடு அந்த புகைப்படங்களையும் விண்வெளி மையத்திற்கு அனுப்பியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த விண்கலம் அனுப்பிய தகவலின் படி, சூரியனின் ஒரு கொரோனா பகுதி அதிக கருப்பு நிறத்திலும், புழுதியாகவும் இருந்துள்ளது. எனவே இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்த விண்கலம் தற்போது 500000 கிமீ/ நேரம் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதோடு, சூரியனின் கொரோனா பகுதிக்குள் மூன்று முறை சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளது என்றும் நாசா தெரிவித்து உள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு முறை மற்றும் நவம்பரில் ஒரு முறையும் சூரியனுக்குள் சென்று திரும்பி வந்துள்ளது. இதை உறுதி செய்ய நாசாவுக்கு றுதிப்படுத்த இடைப்பட்ட மாதங்கள் தேவைப்பட்டது. விண்கலம் அனுப்பிய தகவல்களைக்கொண்டு, பதிவு செய்யப்பட்ட ஆற்றல் தொடர்புகளை பகுப்பாய்வு செய்து உறுதி செய்தது.

 இறுதியில், ரியனைத் தொட்டதை உறுதிப்படுத்தியது. நாசாவின் இந்த நம்ப முடியாத வரலாற்று சாதனை உலக விஞ்ஞானிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது.  நாம் ஏன் இப்போது கற்றுக்கொள்கிறோம்? சரி, NASA அவர்கள்

பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலத்தின் சிறப்பு:

சூரியனில் அதிகளவு வெப்பம் இருப்பதால், அதன் அருகில் நெருங்கும் போது விண்கலம் எரிந்து விடாமல் இருப்பதற்காக கார் வடிவத்தில் நாசா இந்த விண்கலத்தை  உருவாக்கியுள்ளது. மேலும் பார்க்கர் சோலார் புரோப் விண்கலத்தின் முன்புறத்தில் வெப்பநிலைத் தடுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலைத் தடுப்பு கருவியானது Reinforced carbon மூலம் தயாரிக்கப்பட்டது. எனவே இந்த விண்கலம் சுமார் 3ஆயிரத்து முந்நூறு டிகிரி செல்சியல் வரை வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்த விண்கலம் 3 மாதங்களில் சூரியனின் வட்டப்பாதையை சென்றடையும் எனக்கூறப்பட்டது. இதனையடுத்து 7 ஆண்டுகள் சூரியனில் ஆய்வை மேற்கொள்வதோடு அதற்குரியப் புகைப்படங்களையும் அனுப்பிவைக்கும் தன்மைக் கொண்டது. இதுப்போன்ற பல்வேறு சிறப்பான வடிவமைப்புடன் நாசா அனுப்பிய விண்கலம் தான் தற்போது சூரியனின் மேல்படலத்தைப்படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதன் மூலம் சூரியனில் உள்ள பல தெரியாத தகவல்களை நம்மால் அறிந்து கொள்ளமுடியும் என நாசா தெரிவித்துள்ளது.

More articles

Latest article