மாஸ்கோ
ரஷ்யாவில் முக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை குழந்தைகளிடம் நடந்துள்ளது.
தற்போதைய இரண்டாம் அலை கொரோனா பரவலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுப் பல இளைஞர்கள் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் விரைவில் மூன்றாம் அலை கொரோனா பரவலாம் எனவும் அப்போது 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பு இருக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி அமெரிக்காவில் 12-17 வயதான குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் 2-11 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி கோரி பிஃபைஸர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஆனால் மிகவும் சிறிய குழந்தைகளுக்குத் தடுப்பூசியை விட மூக்கு வழி செலுத்தும் மருந்து நல்லது எனக் கருத்து உள்ளது.
ரஷ்யாவில் 8-12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான மூக்கு வழி செலுத்தும் கொரோனா மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிண்ட்ஸ்பெர்க் என்னும் விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இந்த மருந்து சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாகத் தெரிவித்த விரைவில் இதற்கு அனுமதி கிடைத்து செப்டம்பர் மாதம் வெளிவரும் எனக் கூறி உள்ளார்.