X2 அளவிலான சூரிய வெடிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) காரணமாக, புவி காந்த புயல் குறித்து நாசா எச்சரித்துள்ளது.

கடந்த வார இறுதியில் (நவம்பர் 30) நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு கவனித்தது.

இந்த CME டிசம்பர் 3 அல்லது 4ம் தேதி பூமியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் உள்ள காந்தப் புலம் எப்படிச் சாய்ந்திருக்கிறது என்பதற்கேற்ப, மிதமான அளவிலான புவி காந்த புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஒருசில கணிப்புகளில் இது எதிர்பார்ப்பதை விட முன்னதாக அதாவது டிசம்பர் 3ம் தேதியே பூமியை தாக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் தகவல்தொடர்புகள், மின் கட்டமைப்புகள், வழிகாட்டி சமிக்ஞைகளை பாதிக்கலாம் மற்றும் விண்கலம் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.

CME என்பது சூரியனில் இருந்து எரிமரம் போல பறக்கும் வாயு மற்றும் காந்தப் புலங்கள் பூமி நோக்கி வருவது. இது பூமியை வந்தடைந்தால் புவி காந்த புயல் ஏற்படும்.

இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படக்கூடிய ஒன்று என்றபோதும் இதில் அச்ச்சப்பட ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்த புவி காந்த புயல் காரணமாக நியூயார்க் முதல் ஐடஹோ வரை உள்ள வடக்கு மற்றும் மேற்கு மத்திய அமெரிக்க மாநிலங்களில் ஆரோரா எனப்படும் வட துருவ வெளிச்சத்தைக் காண வானியல் ஆர்வலர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.