இந்திய விண்கலனான சந்திரயான்2 நிலவில் இறங்குவதை நாசா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று நாசா முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஜூலை 22ம் தேதி (2019) சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. தற்போது, சந்திரயான்2 நிலவில் பயணித்து வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் -2 தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்து உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் இந்த சாதனையை உலகமே வியப்போடு பார்த்து வருகிறது. சந்திரயான்2-ஐ இஸ்ரோ விஞ்ஞானிகள் எப்படி தரையிறக்கப்போகிறார்கள் என்பதை காண ஆவலோடு காத்திருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா வந்துள்ள முன்னாள் நாசா விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ், உலக நாடுகள் அனைத்தும் விண்வெளியில் ஒரே கூரையின் கீழ் பயணித்து வருகிறது. இஸ்ரோவின் சந்திரயான்-2 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதை நாசா உன்னிப்பாகவும், ஆர்வமாகவும் கவனித்து வருகிறது என்று தெரிவித்து உள்ளார்.
மேலும், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளப்போகும், ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது என்று கூறியவர், அடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர் களை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.