வரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை பாராட்டும் விதமாக கூகுள் டூடுல் வெளியிடுட்டுள்ளது.
பூமியிலிருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதாக தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்தக் கோள்களில் நீர் மற்றும் வாழக்கூடிய தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என விண்வெளிஆராய்ச்ந்தசியாளர் மைக்கேல் கில்லான் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வானியல் ஆரய்ச்சியாளர்கள் ஏழு கோள்களை கண்டுபிடித்துள்ளனர். எனினும் அவை அனைத்தும் பூமி அளவில் இருக்கவில்லை இதனால் பூமி அளவு கொண்ட ஏழு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கோள்களும் ஒரே சுற்றுப் பாதையில் பயணிக்கிறது என்பதால் இவற்றின் ஒரு பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என கூறப்படுகிறது. புதிய கோள்கள் குறித்து ஓரளவு தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் இந்த கோள்களில் வாழக் கூடிய தன்மைகள் இருப்பது மேலும் ஆய்வுகள் நடத்தி பின்பு தான் உறுதியாக தெரிவிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வியாழன் கிரகத்தின் அளவுடைய டிராபிஸ்ட் -1 எனும் மங்கலான குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி குறுகிய தூரத்தில் இந்த ஏழு கோள்கள் வட்டமிடுகின்றன. ஏழு கிரகங்களில் மூன்று கிரகங்கள், உயிரினம் வசிக்கத் தக்க சாத்தியக்கூறுகள் கொண்ட மண்டலத்தில் உள்ளன. இவற்றில் திரவ நீர் மற்றும் உயிரினம் இருக்கும் சாத்தியம் அதிகம். மற்ற நாங்கும் அத்தகைய மண்டலத்தின் அருகிலேயே உள்ளன.
இந்தப் பாறை, புவிக்குரிய கோள்களில் வாழ்க்கை வாழத் தகுதியான சூழ்நிலைகள் உள்ளனவா என்பதை தீர்மானிக்க வளிமண்டலத்தை ஆராய வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வேற்று கிரக வாழ்க்கை குறித்த புதிருக்கு விடைகாணும் விதமாக ஒரு நட்சத்திரத்தின் மிக அருகிலேயே பல்வேறு பூமி-அளவிலான கோள்கள் உள்ளதை நிருபித்தாகிவிட்டது.
லீஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும் இந்த ஆராய்ச்சியின் இணை ஆசிரியருமான இம்மானுவல் ஜெஹின் கூறுகையில், “”நமது விண்மீனில் 200 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. பூமி அளவிலான கோள்கள் இதைவிட பத்து மடங்கு எண்ணிக்கையில் உள்ளன”என்றார்.
சில மாதங்களுக்கு முன்னர், லீஜ் பல்கலைக்கழகத்தின் மைக்கேல் கில்லன் குழுவினர் டிரப்பிஸ்ட் -1 சுற்றி மூன்று கிரகங்கள் உள்ளதை கண்டுப்பிடித்தனர். அதன் தொடர்ச்சியாய் மேலும் நான்கு கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இப்போது எண்ணிக்கை ஏழு வரை, மற்றும் Gillon மேலும் இருக்க முடியும் என்றார். இவர்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் நேச்சர் ஆய்விதழில் வெளியிடப் பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, “இந்தச் சிறிய சூரிய மண்டலம், வியாழன் மற்றும் அதன் கலீலியன் நிலவுகளை ஒத்து இருக்கின்றது.
டிரப்பிஸ்ட்-1 தான் நமது சூரியன் என்றால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏழு கிரகங்களும் சூரியனின் மிகஅருகில் உள்ள புதன் சுற்றுப்பாதை க்குள் இருக்கும்.
இந்த அமைப்பின் மையத்தில் உள்ள மிகக் குளிரான டிரப்பிஸ்ட்-1 நட்சத்திரம் சூரியனை விட 200 மடங்கு மங்கலான பிரகாசத்தையே தருகின்றது, மேலும், இந்த நட்சத்திரம் சிவப்பு / ஆரஞ்ச் (சால்மன் மீன்) நிறத்தில் இருக்கும்” எனப் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த தொலைப்பேசி பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞானிகள், இதற்கு ஆங்கில எழுத்துக்களான (சிறிய எழுத்துக்கள், b to f) “பி,சி,டீ, இ,ஈ,எஃப் எனப் பெயரிட்டுள்ளனர். ( பெரிய எழுத்துக்கள் நட்சத்திரங்களூக்கு பயன்படும்).
கெமிக்கல் பரிசோதனைகள் மூலம் 99% உயிர்கள் உள்ளதை உறுதி செய்ய முடியும். ஆனால், நாம் நேரில் செல்லாமல் அதனை முழுவதும் உறுதிப்படுத்திட முடியாதென கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அமரி டிரியாட் ( Amaury Triaud) கூறினார்.