வாஷிங்டன்

ந்தியாவில் பெரும்பாலான இடங்களில் தீ பிடித்துள்ளதால் இயற்கை மாசு படும் என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானில் உள்ள செயற்கைக்கோள் மூலமாக அமெரிக்க விண்வெளி மையமான நாசா பூமியை படம் பிடித்து வருகிறது.   அவ்வாறு கடந்த 10 நாட்களாக பிடிக்கப்பட்ட படங்களை நாசா வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தப் படங்களில் இந்தியாவில் உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா,சத்தீஸ்கர், தென் இந்தியாவின் சில பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் தீ எரிவது தெரிய வந்துள்ளது.   இதனால் இந்தியா மேலும் வெப்பமடையும் என நாசா அச்சம் தெரிவித்துள்ளது.

இந்த தீயானது காட்டுத் தீயாகவோ அல்லது விளைநிலங்களில் உள்ள தீயாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது.    இந்தத் தீயினால் கடும் மாசு உண்டாகலாம் என அஞ்சப்படுகிறது.    விளைநிலங்களில் உள்ள மிச்சம் மீதிப் பொருட்களை தீ வைத்துக் கொளுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.   ஆயினும் அது தொடர்ந்து வருகின்றது.

இந்த தீயினால் மாசு உண்டாகும் என்பதாலும் வெப்பம் அதிகரிக்கும் என்பதாலும் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நாசா கூறி உள்ளது.