நியூயார்க்

ரு நாசா விண்வெளி வீரர்கள் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட் வெடித்துச் சிதறியது.   அதன்பிறகு நாசா விண்வெளி வீரர்களை தானாக அனுப்புவதை நிறுத்தியது.  தனியார் நிறுவனங்களுடன் இணைந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப முடிவு செய்த நாசாவுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்தது.   இந்த நிறுவனம் தனது ஃபல்கான் 9 என்னும் ராக்கெட்டை வெற்றிகரமான இரு நாசா வீரர்களுடன் விண்ணில் செலுத்தி உள்ளது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பெஸ் செண்டரில் இருந்து இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.  சென்ற வாரம் நடைபெறுவதாக இருந்த இந்த பயணம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.   இதில் நாசாவை சேர்ந்த போப் பென்கன் மற்றும் டக் ஹார்லி ஆகிய இருவர் விண்ணுக்கு அனுப்பட்டுள்ளனர்  விண்வெளியில் இவர்கள் சில முக்கியமான ஆய்வுகளைச் செய்ய உள்ளனர்.

இந்த ஃபல்கான் 9 ராக்கெட்டில் இரு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி ராக்கெட் 2.5 நிமிடம் விண்ணில் பறந்து மெயின் ராக்கெட்டை விண்ணுக்குக் கொண்டு சென்று பிறகு பத்திரமாகத் தரை இறங்கியது..  அதன் பிறகு இரண்டாம் கட்ட ராக்கெட் 6 நிமிடம் பறந்து ராக்கெட்டை வட்டப்பாதையில் நிறுத்தி விட்டு கழன்றது.  தற்போது வீரர்கள் க்ரூ டிராகன் என்னும் முன்பகுதியில் சுற்றுப்பாதையில் வெற்றிகரமான பயணம் எய்து வருகின்றனர்.

கூம்பு போன்ற முன்பக்கத்தைக் கொண்ட இந்த க்ரூ டிராகன் விண்வெளி வீரர்களை விண்வெளி மையத்துக்கு அழைத்துச் செல்கிறது.   இதில் உள்ள சிறு சிறு எஞ்சின்கள் இந்த பகுதியை விண்வெளி மையத்துக்கு எடுத்துச் செல்கிறது.  விண்வெளி மையத்தின் வாயிலில் இந்த க்ரூ டிராகன் சரியாக இணைந்த பிறகு வீரர்கள் மையத்தின் உட்சென்று ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபிறகு வெடித்துச் சிதறினாலும் வீரர்களுக்கு அபாயம் இருந்திருக்காது.  இண்டஹ் ராக்கெட் வெடிக்க நேர்ந்தால் வீரர்கள் உள்ள க்ரூ டிராகன் மட்டும் தனியே பிரிந்து பயணத்தை தொடரும். இதனால் வீரர்கள் பாதுகாப்புடன் செல்ல முடியும் ,   இன்று இரவு சுமார் 8.30 மணிக்கு இவர்கள் விண்வெளி ஆயுவு மையத்துடன் இணைய உள்ளனர்.