கொள்ளைநோய் காலத்திலும், உள்ளங்களைக் கொள்ளை அடித்த காதல்

இந்த கொரோனா உலகமெங்கும் பல்வேறு பிரச்சினைகளை சமூக, பொருளாதார ரீதியாக உருவாக்கி விட்டுக்கொண்டே இருக்கும் இந்த சூழலிலும், இதே கொரோனா இரு மனங்கள் காதலில் சங்கமிக்கக் காரணமானது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஆயா மொசாப் என்பவர் எகிப்தில் உள்ள ஓர் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.  இவரிடம் கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற வந்தார் முகம்மது ஃபாஹ்மி என்னும் இளைஞர்.  பார்த்த மாத்திரத்தில் இருவருக்குமே வேதியல் மாற்றங்கள் நிகழத்தொடங்கிவிட, முகம்மதுக்கு கொரோனா முற்றிலும் குணமாக முழுதாக இரண்டு மாதங்கள் ஆகியிருக்கிறது.  இந்த இரண்டு மாதங்களில் இருவருக்குமான நெருக்கம் அதிகமாகி விட்டிருக்கிறது.

குணமாகி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பத் தயாரான அன்று முகம்மது மோதிரம் அணிவித்து தனது காதலைத் தெரிவிக்க, ஆயா மொசாப் மனம் முழுக்க சந்தோசத்துடன் தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார்.  இப்போது மருத்துவரும், குணமான நோயாளியும் காதல் பறவைகளாக வானில் சிறகடித்துப் பறந்து வருகின்றனர்.  கொரோனாவால் இணைந்த இந்த வித்தியாசமான காதல் ஜோடியை நாமும் வாழ்த்துவோம்.

– லட்சுமி பிரியா