நாசா பயிற்று மொழியாக தமிழ் இணைப்புக்கு ஒப்புதல்

Must read

வாஷிங்டன்

மெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் பயிற்று மொழிகளில் தமிழ் மொழி சேர்க்கப்பட உள்ளது.

பத்தாவது உலக தமிழ் மாநாட்டின் போது நாசாவுக்கு ஒரு தமிழர் கோரிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார்.  அதில் உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிருவனமான நாசாவில் தமிழ் பயிற்று மொழியாக ஏற்றுக் கொள்ளப்படுமா என கேள்வி எழுப்பி இருந்தார்.  அதற்கு உடனடியாக பதில் அளித்த நாசா அவர் கோரிக்கைக்கு பரிசீலிக்கப்படும் என தெரிவித்தது

கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் மாத, பழனியை சேர்ந்த .தேன் குமிலன் என்பவர் தமிழ் மொழி குறித்த விவரங்களையும் தமிழ் மக்களை குறித்து அனுப்பிய கட்டுரையையும் கண்டு வியந்த நாசா அதை அச்சேற்றியது.    அதன் பிறகு பல தமிழறிஞர்களும் இதே கோரிக்கையை விடுத்தனர்.  அதை ஒட்டி தமிழ்மொழி தற்போது பயிற்று மொழிகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, “இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் பல நாடுகளிலும் தமிழர்கள் உள்ளனர்.   ஒரு சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு இந்திய மொழி அதுவும் நமது தமிழ் மொழி பயிற்று மொழியாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சிக்குறியதாகும்.   இதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கை மேலும் வளர்ந்துள்ளது.

இது நமது தாய்மொழிக்கு கிடைத்த பெருமையாகும்.  பணிக்காக உலகெங்கும் செல்லும் மக்கள் வேறு மொழிகளை கற்க வேண்டியது அவசியமாகிறது.   ஆனால் தமிழுக்கு கிடைத்த முக்கியத்துவம் அவர்கள் எந்நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கு தனி பெருமையை அளிக்கிறது.    அத்துடன் அது அதிகார பூர்வ மொழியாகும் போது  மனது மிகவும் மகிழ்கிறது” என கூறி உள்ளார்.

விஞ்ஞானி உமா ராமச்சந்திரன், “இந்திய மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தமிழ் ஒன்றாகும்.  இதற்கு நாசாவின் அங்கீகாரம் பெருமை அளித்துள்ளது.  தற்போது நாசாவில் அரபிக், சீனா, ஆங்கிலம்,  பிரஞ்சு, ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் உள்ளன.  அந்த வரிசையில் தமிழ் இணைந்தது அம்மொழியின் உலகப் பெருமைக்கு மற்றொரு எடுத்துக் காட்டு” என தெரிவித்துள்ளர்.

இந்த செய்தியை பாராட்டும் பலர் மத்தியில் சென்னை கிறுத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் சுரேஷ் தாஸ், “நாசாவில் மற்றொரு மொழி சேர்க்கப்பட தேவை என்ன? அனைத்து உத்தரவுகளும் ஆங்கிலத்தில் செய்யபடுகின்றன.  இதனால் இந்திய மொழி உள்ளிட்ட எந்த நாட்டு மொழியை சேர்ப்பதாலும் அயன் இல்லை.  இதனால் எவ்வித நன்மையும் உண்டகாது” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

More articles

Latest article