நரசிம்ம ஜெயந்தியும் வைகாசி விசாகமும் – நெட்டிசன் பதிவு
இன்று(25-05-2021) செவ்வாய்க்கிழமை அன்று நரசிம்ம ஜெயந்தி மற்றும் முருகப்பெருமானின் அவதார தினமாகப் போற்றப்படும் வைகாசி விசாகமும் ஒருசேர வருகின்றது.
ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தியும், வைகாசி விசாகமும் இணைந்து வருவதால் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.
முருகப்பெருமானும் நரசிம்மரும் நவக்கிரகங்களில் செவ்வாயின் அம்சம் கொண்டவர்கள் ஆவர். செவ்வாய்க் கிரகத்திற்குக் காரகர் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உருவாக அனைவரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.
அன்றைய தினம் காலையில் ஸ்ரீநரசிம்ம வழிபாடு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வழிபட ஏற்ற நேரமாக உள்ளது இந்த நேரத்தில்…
ஓம் உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம் பீஷணம் பதிரம் மிருத்யும் மிருத்யும் நமாம்யஹம்
என்னும் மந்திரத்தை 32 முறை சொல்ல வேண்டும்.
அந்த நேரத்தில் வீடு முழுவதும் வென்கடுகு கலந்து சாம்பிராணி புகை வீடு முழுக்க பரவ விட வேண்டும்.
அன்றைய தினமே மாலை நேரத்தில் 6 மணிக்கு, முருகனின் வெற்றி தரும் மந்திரம்
ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் முழுவதுமாகப் பாராயணம் செய்ய வேண்டும், அவ்வாறு பராயணம் செய்ய இயலாதவர்கள் கீழ்க்கண்ட இரண்டு வரி முருக மந்திரம் பாராயணம் செய்து சொல்லலாம்.
காக்கக் காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
மாலை நேரத்திலும் சாம்பிராணியில் வெண்கடுகு கலந்து வீடு முழுக்க சாம்பிராணி புகை காட்ட வேண்டும்.
எதுவுமே தனித்துச் செயல்பட்டால் பலம் இல்லை, எதுவும் நடக்கப் போவதில்லை,, அனைவரும் ஒன்று பட்டு இந்த நல்ல நாளை பயன்படுத்தி இருக்கும் உயிர்களையாவது காப்பாற்றுவோம்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் நரசிம்மரும், வெற்றியையே மாலையாகச் சூடிக்கொண்ட முருகனும் இவர்கள் இருவரையும் ஒருசேர ஒரே கணத்தில் வழி படுவோம்
அனைவரும் நண்பர்கள் உறவினர்கள் என எல்லோரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்
உலக நன்மை வேண்டி பக்தனின் தாழ்மையான வேண்டுகோள் இதுவாகும்.
இறுதி முயற்சியாக அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபாடு செய்வோம்….