லக்னோ:
ராகுல் காந்தி மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. நல்வாய்ப்பாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தப்பினார்.
அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, கடந்த 20 நாட்களாக 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டார் தூர யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

நேற்று யாத்திரையின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில், சரபா பஜார் பகுதியை அடைந்தார். மகாராஜா அக்ராசென் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு ராகுல் மாலை அணிவித்தார்.
பிறகு யாத்திரையை தொடர்வதற்காக அவர் திரும்பியபோது, அவரின் பின் பகுதியில் சென்றுகொண்டிருந்த மின் வயர் அவரது காதில் உரசி மின்சாரம் தாக்கியது. உடனே சுதாரித்த ராகுல், கீழே குனிந்துகொண்டார். இதனால் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்.
தவிர, அந்த நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டாதால் பெரிய அசம்பாவிதம் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தால் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Patrikai.com official YouTube Channel